Popular Posts

Sunday, August 29, 2021

அகத்தியரை ஏன் வணங்க வேண்டும்?

அன்பர்களுக்கு வணக்கம்.

அகத்தியரை ஏன் வணங்க வேண்டும்?

அகத்தியரை, அகஸ்தியர் எனவும்  அகஸ்தீஸ்வரர் எனவும் அழைப்பர்.

அகஸ்தியரை முனிவராக பார்க்கலாம்; சித்தராக பார்க்கலாம்;ரிஷியாக பார்க்கலாம்; அதையும் தாண்டி ஈசனாகவும் பார்க்கலாம்.

எல்லையற்ற பிரபஞ்சத்தை ஆளுகின்ற ஈசனை விஸ்வநாதன் என்றழைப்பர்; விஸ்வேஸ்வரன் என்றும் அழைக்கலாம்.அதேபோல நுண்ணினும் நுண்ணியதாய்  நமக்குள் வீற்றிருந்து அகத்தை ஆளுகின்ற ஈசனை அகத்தீஸ்வரர் என்றும் அழைக்கலாம். ஈசன் வேறு  அகத்தியர் வேறு அல்ல.

மனதை ஆளுகின்ற ஈசனாக இருப்பதால், அவரை வணங்கினால், உங்கள் மனம் செம்மையாகும்;அவரைப் போற்றித் துதிக்க துதிக்க உங்கள் மனம் தெளிவாகும்; அவரை உள்ளம் உருகி வணங்க, வணங்க அவர் உங்கள் உள்ளத்தில் எழுந்தருளுவார்.

சரி, எப்படி அவரை வணங்குவது?

அவரவர் தகுதிக்கேற்ப,அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப,அவரவர் கல்வி கேள்விகளுக்கு ஏற்ப, அவரவர் பக்குவத்திற்கு ஏற்ப அவரை வணங்கலாம்.

தவம் இயற்றலாம்;அருள் தருவார். அஷ்டாங்க யோகத்தின் வழிநின்று அவரை அடைய முயலலாம்;உங்கள் அருகில் நின்று வழிநடத்துவார். என்னாலாவது ஒன்றுமில்லை ஆவதனைத்தும் அகத்தியன் செயலே என்றெண்ணினால் உங்களுளிருந்து அனைத்தையும் செய்து முடிப்பார்.

அவரை எப்படி வணங்குவது?

பக்தி நெறியில் நாமாவளி அல்லது போற்றி சொல்லுதல் ஒரு நல்ல வழிபாட்டு முறை. 108 முறை அவரை போற்றி துதிக்கும் பொழுது, நம் மனம் அவரையே பற்றிக் கொண்டிருக்கும் பொழுது, அவர் நம்முள் நுழைந்து நம் அகத்தை ஒளிமயமாய் மாற்றுவார்.

இந்த அகத்தியர் 108 போற்றி, அவரின் துணைவியார்,ரிஷி பத்தினி, அம்மை ஈஸ்வரியின் மறு உருவம் லோபாமுத்திரை அருளியது என நான் அறிகின்றேன்.எனவே இந்த அகத்தியரின் 108 போற்றி சொல்லி அவரை வழிபடுவது மிகுந்த பலனை கொடுக்கும்.

108 போற்றியை எப்படி சொல்வது ?

எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். உங்களுக்கு எப்படி சொல்ல பிடிக்கிறதோ அப்படி சொல்லலாம்.

எப்படி சொன்னால் நன்றாக இருக்கும் என்று நான் கருதினேனோ அந்த வகையில் இந்த காணொளியை உருவாக்கி இருக்கிறேன்.

அவர் என்னுள் சுவாசமாய் உள்ளே நுழைந்து, என் அகத்தை சீராக்கி, கசடுகளை வெளியேற்றி  மறுபடியும் நுழைந்து அகத்தை சீராக்கி கசடை தூக்கி எறிந்து.....

ஓம் என்ற உள் மூச்சில் உள் நுழைந்து,  நாமாவளியின் பொழுது அகத்தை தூய்மை செய்து, போற்றி எனும் வெளிமூச்சில் என் அக கசடை வெளியே அகற்றி...

இப்படி ஒவ்வொரு முறையும் என் அகத்தை சீரமைக்கின்ற முறையாய் இருப்பதால்,போற்றியை, ஆர்ப்பாட்டமில்லாமல் அவசரமில்லாமல் நிதானமாக, மிக நிதானமாக சொல்லியிருக்கிறேன்.

நீங்களும் ஓம் ஸ்ரீ சத்குரு அகத்தியர் 108 போற்றியை தினமும் சொல்லி, அவருடைய பூரண அருளை பெற்றிட அவரது பாத கமலங்களில் சரணடைகிறேன்.

நன்றி

குறிப்பு:
மேற்கண்டவற்றை  நன்கு உள்வாங்கிய பிறகு, மறுபடியும் * மனமது செம்மையானால்* YouTube Channel

(https://youtu.be/WRT8WG1KVRo)

சென்று 🎧 ஹெட்போனுடன் முழுமையாக கேட்டு பாருங்கள்;
உங்கள் மனம் செம்மைபாகும்.

வாழ்த்துக்கள்.

 Why worship Agathiyar?

 

 Agathiyar is also known as Agasthiyar and Agastheeswarar.

 

 Agastya can be seen as a sage; See as Siddhar; see as Rishi; Beyond that it can also be seen as Eswar.

 

 Eswar, who rules the infinite universe, is called Viswanathan; We can also call him Visvesvaraya. Agasthiyar is no different from Eswar.

 

 If you worship him because he is the ruling Eswar of the mind, your mind will be pure; your mind will be clear,if you praise and glorify Him; He will arise into your soul and melt your heart.

 

 Well, how to worship him?

 

 He can be worshiped according to your merits, according to your circumstances, according to your education, according to your maturity.

 

 Penance can be composed; grace will give. You can try to reach him through the path of Ashtanga Yoga; he will stand near you and guide you. Agathiyan will do everything for you if you thinks that every thing is done by Agasthiyar not by you

 

 How to worship him?

 

 Namavali or chanting Name in devotional practice is a good form of worship. When we praise Him 108 times, when our minds are clinging to Him, He will enter into us and transform our inmost being into a light.

 

 I know that the reincarnation of this Agathiyar 108 Potri was chanted by his consort, Rishi Pathini, Ammai Eswari bestowed the Lopamudra.

 

 How to tell the 108 Potri?

 

You can tell anyway. You can say whatever way you like to say.


 I made this video in a way that I thought would be nice to say.

 

 He breathed into me, adjusted my gut, expelled the dirt and re-entered the gut and threw the dirt .....

  Entering in the inner breath of Om, cleansing the inside during the nomenclature, and expelling my inner trash out in the outer breath called Potri ...

  

 Since every time like this is a way of aligning my intuition, I have chanted the Potri, calmly, very calmly, without haste , without hurrybury.  

 

 I also say Om Sri Satguru Agathiyar 108 Potri daily and surrender at his foot lotuses for you to receive His perfect grace.

 

 Thanks

 

 Note:

 

  After a good understanding of the above,go again to * மனமது செம்மையானால்* YouTube Channel

  

  (https://youtu.be/WRT8WG1KVRo)

  

 and listen fully with headphones 🎧;

 Your mind is refined.

 Congratulations.

No comments:

Post a Comment