Popular Posts

Tuesday, August 24, 2021

ஸ்ரீ லோபமுத்திரை 108 போற்றி அர்ச்சனை

 

ஸ்ரீ லோபமுத்திரை 108 போற்றி அர்ச்சனை

 

ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி!

ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி!

ஓம் அருமறையின் வரம்பே போற்றி!

ஓம் அறம் வளர்க்கும் அம்மையே போற்றி!

ஓம் அருந்தவ செல்வியே போற்றி!

 

ஓம் அப்பர் பிணி மருந்தே போற்றி!

ஓம் அகஸ்தியன் தேவியே போற்றி!

ஓம் அருள் நிறை அம்மையே போற்றி!

ஓம் ஆதியின் பாதியே போற்றி!

ஓம் ஆனந்த நாயகியே போற்றி!

 

ஓம் இளவஞ்சிக் கொடியே போற்றி!

ஓம் உயிர் ஓவியமே போற்றி!

ஓம் உலக நாயகியே போற்றி!

ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி!

ஓம் ஏகனின் துணைவி போற்றி!

 

ஓம் ஐயந்தீர்ப்பாய் போற்றி!

ஓம் ஒப்பிலா அமுதே போற்றி!

ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி!

ஓம் கற்றோர்க்கினியோய் போற்றி!

ஓம் கல்லார்க்கும் எளியோய் போற்றி!

 

ஓம் கடம்பவன சுந்தரியே போற்றி!

ஓம் கல்யாண சுந்தரியே போற்றி!

ஓம் கனகமணி குன்றே போற்றி!

ஓம் கற்பின் அரசியே போற்றி!

ஓம் கனகாம்பிகையே போற்றி!

 

ஓம் கதிரொளிச்சுடரே போற்றி!

ஓம் கற்பனை கடந்தாய் போற்றி!

ஓம் காதார் குழலீ போற்றி!

ஓம் குடமுனி நாயகி போற்றி!

ஓம் குற்றம் பொறுப்பாய் போற்றி!

 

ஓம் கூடற் காலப மயிலே போற்றி!

ஓம் கோலப் பசுங்கிளியே போற்றி!

ஓம் சக்தியின் வடிவே போற்றி!

ஓம் சங்கம் வளர்த்தாய் போற்றி!

ஓம் சங்கிரிக்கொப்பாய் போற்றி!

 

ஓம் செங்கமல தாயே போற்றி!

ஓம் செண்டு கைகொண்டாய் போற்றி!

ஓம் செண்பக வல்லியே போற்றி!

ஓம் செந்தமிழ் தாயே போற்றி!

ஓம் செல்வ நாயகியே போற்றி!

 

ஓம் செல்வம் தருவாய் போற்றி!

ஓம் சுடரே போற்றி !

ஓம் ஜோதியே போற்றி!

ஓம் சிங்கார வல்லியே போற்றி!

ஓம் சிவகாம சுந்தரியே போற்றி!

 

ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி!

ஓம் சிவானந்த வல்லியே போற்றி!

ஓம் சூளா மணியே போற்றி!

ஓம் ஞானாம்பிகையே போற்றி!

ஓம் ஞானத்தின் வடிவே போற்றி!

 

ஓம் ஞானப் பூங்கோதையே போற்றி!

ஓம் தவமுனி நாயகியே போற்றி!

ஓம் திருவே போற்றி!

ஓம் திருவின் துணைவி போற்றி!

ஓம் திருவுடையம்மனே போற்றி!

 

ஓம் திருநிலை நாயகியே போற்றி!

ஓம் தீந்தமிழ் தந்தாய் போற்றி!

ஓம் தீவினை அறுப்பாய் போற்றி!

ஓம் துயரம் துடைப்பாய் போற்றி!

ஓம் குரு பத்தினியே போற்றி!

 

ஓம் தெவிட்டாத அமுதே போற்றி!

ஓம் தென்னவன் தேவியே போற்றி!

ஓம் தேன்மொழியம்மையே போற்றி!

ஓம் தோன்றா துணைவி போற்றி!

ஓம் தையல் நாயகியே போற்றி!

 

ஓம் இல்லற துறவி போற்றி!

ஓம் இன்பம் அளிப்பாய் போற்றி!

ஓம் நல்லருங் கொழுந்தே போற்றி!

ஓம் நல்லவர்க்கினியோய் போற்றி!

ஓம் நாடுவார்க்கருள்வாய் போற்றி!

 

ஓம் நீலாம்பிகையே போற்றி!

ஓம் நோயினை தவிர்ப்பாய் போற்றி!

ஓம் பசுபதி நாயகியே போற்றி!

ஓம் பல்லுயிரின் தாயே போற்றி!

ஓம் பவளவாய்க் கிளியே போற்றி!

 

ஓம் பக்தனை காப்பாய் போற்றி!

ஓம் பழமறையின் குருந்தே போற்றி!

ஓம் பரமானந்த வல்லியே போற்றி!

ஓம் பவழக் கொடியே போற்றி!

ஓம் பண்ணின் மணியே போற்றி!

 

ஓம் பாகம் பிரியாள் போற்றி!

ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி!

ஓம் பொதிகையில் அமர்ந்தாய் போற்றி!

ஓம் பொருநையின் தாயே போற்றி!

ஓம் பொற்கொடியே போற்றி!

 

ஓம் பெரிய நாயகியே போற்றி!

ஓம் பேரின்பப் பெருக்கே போற்றி!

ஓம் பேரருட்கடலே போற்றி!

ஓம் மக்களை காப்பாய் போற்றி!

ஓம் மங்கள நாயகியே போற்றி!

 

ஓம் மழலைக் கிளியே போற்றி!

ஓம் மனோன்மணியே போற்றி!

ஓம் மாணிக்க வல்லியே போற்றி!

ஓம் முக்கட் சுடரே போற்றி!

ஓம் முக்தியைத் தருவாய் போற்றி!

 

ஓம் முழுமுதற் பொருளே போற்றி!

ஓம் முனிவரின் துணைவி போற்றி!

ஓம் முத்தமிழ் செல்வி போற்றி!

ஓம் முன்வினை தீர்ப்பாய் போற்றி!

ஓம் வேதவல்லியே போற்றி!

 

ஓம் வேதவிழுப் பொருளே போற்றி!

ஓம் வித்தகச் செல்வி போற்றி!

ஓம் விமல நாயகியே போற்றி!

ஓம் வையகம் காப்பாய் போற்றி!

ஓம் வாழ்வினை அளிப்பாய் போற்றி!

 

ஓம் விண்ணோர் மகிழும் விமலி போற்றி!

ஓம் வேண்முழுதும் தருவாய் போற்றி!

ஓம் லோபமுத்திரை அம்மையே போற்றி! போற்றி!

 

திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment