Popular Posts

Monday, August 30, 2021

Binaural Beats helps to get into Deep meditation

அன்பர்களுக்கு வணக்கம்.

நம் மனம் எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரி இருப்பதில்லை; மாறிக்கொண்டே இருக்கும்.

காரணம் என்னவாக இருக்கும்?

மூளையைப் பற்றியும் அதன் உணர்வு அலைகளை( ஆல்ஃபா, பீட்டா, காமா,தீட்டா, டெல்டா) பற்றியும் படித்திருப்போம்.

மனத்தின் விழிப்புணர்வுக்கு ஏற்ப மூளையில் அலைகள் வெளிப்படும்.அதே போல் மூளை சில அதிர்வலைகளை உணரும் போது அதற்கேற்ப மனத்தின் தன்மை மாறும்.

சரி. அதற்கென்ன?

நாம் விரும்பும் மனநிலையை நம்மால் உருவாக்க முடியும்.

அது எப்படி?

Binaural Beats. ஒலியலைகலை ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் கேட்கும் போது மூளை அதற்கேற்ப அதிர்வுகளை வெளிப்படுத்தும்.அதன் பயனாகநாம் விரும்பும் மனநிலையை நம்மால் உருவாக்க முடியும்.

நம்மால் எளிதாக தியான நிலையை உணரமுடியுமா?

முடியும். அதற்கு தீட்டா அலைகள் உதவும்.

எப்படி?

முதலில் அதன் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

தீட்டா பைனரல் பீட்ஸைக் கேட்பதன் 10 நன்மைகள்

1. மன அழுத்தத்தை நீக்கும்  
         
மூளை அதிக தீட்டா அலைகளால் சூழ்ந்திருக்கும் பொழுது, ​​நாம் மன அழுத்தம் இல்லாமலும் பதட்டம் இல்லாமலும் இருப்பதுடன் அமைதியாகவும் நிம்மதியாகவும் இருக்கிறோம்.

2. எளிதான தியானப் பயிற்சி
 
  தீட்டா உட்செலுத்தப்பட்ட இசையைக் கேட்பது உங்கள் மூளைக்கு அதிக அதிர்வெண் கொண்ட பீட்டா அலைகளையும் குறைந்த அதிர்வெண் தீட்டா அலைகளையும் உருவாக்க ஊக்குவிக்கும்;  உங்கள் கவலை மறைந்து, நீங்கள் அமைதியாக இருக்க  உதவுகிறது.

  தியானம், மன அழுத்தம் மற்றும் கவலையான மன நிலையை குறைக்கிறது.  தியானம் உங்கள் உள் மனக்குமறலை நிதானமாக்கி, உண்மையான மனஅமைதியை உணர்ந்து, மனம் தெளிவு பெற உதவுகிறது.
 
தொடர் பயிற்சிக்கு பிறகு, உங்கள் தியானத்தின் பயனாக,  நீங்கள் மிகவும் நேர்மறையாக உணர்வதுடன் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும், இருப்பீர்கள். உங்களிடம் இரக்கம் மிகுந்து காணப்படும்

3. படைப்பாற்றல் உன்னத நிலையை அடையும்

இசைக்கலைஞர்கள் உள்ளிட்ட
படைப்பாளிகள் தங்கள்
படைப்பு மிளிரும் சூழலை தீட்டா அலைகளின் அதிர்வுகள் உருவாக்குவதாக உணர்கிறார்கள்.

  4. உடல் குணப்படுத்துதல் & புத்துணர்ச்சி
  
தீட்டா மூளை அலைகள் தியானத்தில் ஆதிக்கம் செலுத்தி, உடலில் உள்ள கார்டிசோல் மற்றும் அழற்சி புரதங்களைக் குறைக்கிறது

தியானம் மற்றும் தீட்டா அலைகளால் சூழ்ந்திருக்கும் பொழுது, மன அழுத்த ஹார்மோன்கள் மற்றும் அழற்சி புரதங்களைக் குறைந்து, உங்கள் உடலில் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது.

5.மனத்தெளிவு அதிகரித்தல்

தீட்டா  ஒலியலைகளை கேட்ட பிறகு, உங்கள் மனம் மிகுந்த தெளிவுடன் இருப்பதை  உணரலாம்.

6. தெளிவான கனவு

தீட்டா பைனரல் துடிப்புகள் உங்களை ஆழ்ந்த தளர்வான, உள்நோக்கு நிலைக்கு அழைத்துச் செல்லலாம், அங்கு உங்கள் மூன்றாவது கண் தூண்டப்படலாம் மற்றும் உயர்த்த உள்ளுணர்வு தோன்றலாம்.

7.வலிமை அதிகரிக்கும்

30 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் மிகவும் தளர்வாக உணர்ந்த பிறகு, ​​ புத்துணர்வாக இருப்பீர்கள். மிகுந்த வலிமையுடன் வாழ்க்கையை அனுகலாம்.

8.உறவு மேம்படும்

அமைதியாகவும், அதிக உள்ளுணர்வு கொண்டவராகவும், மனத் தெளிவின் உயர்ந்த உணர்வினை பெற்று  வாழ்க்கையை அனுபவிக்கலாம்.இது, நீங்கள் மிகவும் இரக்கமானவர் என மற்றவர்கள் புரிந்துகொள்ள துணை செய்யும்.

9. உங்கள் ஆழ் மனதில் நுழையலாம்

தீட்டா அலைகள் பொதுவாக உத்வேகம் மற்றும் நுண்ணறிவு உணர்வுகளால் வகைப்படுத்தப்படும் தியான நிலைக்கு ஒத்தவை.  எனவே, சிலருக்கு, தீட்டா அலையில் இருப்பது கடவுள்/இயற்கை அன்னையுடன் மிகவும் ஆன்மீக, தெய்வீக இணைப்பிற்கான பாதையை அளிக்கிறது.

10. சிறந்த தூக்கம்

  தூங்கும் சூழலை உருவாக்கும் நற்கருவியாக தீட்டா அலைகள் இருக்கின்றன.
 
  தீட்டா அலைகளால் மூளை தன்னியல்பாக நல்ல தூக்கத்தை தரும்.

https://www.binauralbeatsfreak.com/binaural-beats/the-benefits-of-theta-binaural-beats

மிகுந்த பிரம்மிப்பாக இருக்கிறது. அதை நாங்கள் உணரமுடியுமா?

நிச்சயம் முடியும்.* மனமது செம்மையானால்*YouTube Channel சென்று அகத்தியர் 108 போற்றி

https://youtu.be/WRT8WG1KVRo

வீடியோவை ஹெட்போனுடன் 🎧 முழுமையாக பாருங்கள். தீட்டா ஒலியலைகள் நீங்கள் தியான நிலையை உணர உதவும்.

நன்றி

Hello dear ones.

Our minds are not always the same;  Will keep changing.

What could be the reason?

We have read about the brain and its sensory waves (alpha, beta, gamma, theta, delta).

The waves in the brain are exposed according to the awareness of the mind. Similarly, when the brain senses certain vibrations, the nature of the mind changes accordingly.

OK.  For what?

We can create the mood we want.

How is that?

Binaural Beats.  The brain emits vibrations when listening to acoustics on a specific frequency. Its effect is that we can create the mood we want.

Can we easily realize the meditative state?

Can.  Theta waves help with that.

How?

Let us first learn about its benefits.

10 Benefits of Listening to Theta Binaural Beats

1. Stress Relief

When the brain is in a state of high theta wave production, we are calm and relaxed, not stressed or anxious.

2. Easier Meditation Practices

Listening to theta infused music will encourage your brain to produce fewer high frequency beta waves and more lower frequency theta waves; enabling you to calm down and reduce any anxiety you feel.

Meditation provides huge benefits such as lowering stress and anxiety levels. Meditation can silence your inner critic for a while, help you access inner calm and induce a sense of peace and mental clarity.

With regular practice, you will find that post your meditate state, you will feel more positive, happy, content and compassionate with yourself and others.

3. Increased Levels of Creativity

Naturally creative people such as musicians and artists are said to have high operating levels of theta waves when they are engaged in their craft.

4 Body Healing & Rejuvenation

Meditation helps reduce cortisol and inflammatory proteins in the body, and as we've discussed, theta brainwaves are dominant in meditation.

The meditation group showed bigditation and entering the theta state will help you lower stress hormones and inflammatory proteins and help your body build better immunity.

5. Increased Mental Clarity

After a theta listening session, you'll find you have access to increased mental clarity.

6. Lucid Dreaming
Theta binaural beats can take you down into a deeply relaxed, introspective state, where you can stimulate your third eye and open a gateway to higher intuition.

7. Increased Vigour

Being so deeply relaxed for 30 minutes or so means that when you emerge, you feel restored and empowered. You are ready to take on life with new-found vigour.

8. Improved Relationships

A calmer, more intuitive you, with a heightened sense of mental clarity and appreciation for life, means a more approachable you.

It also means a more compassionate and understanding you.

9. Tap Into Your Subconscious Mind

Theta waves are generally characterized by feelings of inspiration and insight – akin to the state of meditation. Therefore, for some, being in the theta state presents a pathway to a more spiritual, divine connection with God/Mother Nature.

10.Better Sleep

theta waves are instrumental in the falling asleep part of the sleep cycle.

Encouraging production of theta waves through brainwave entrainment will contribute positively to sleep.

https://www.binauralbeatsfreak.com/binaural-beats/the-benefits-of-theta-binaural-beats

Is absolutely stunning.  Can we feel it?

Definitely can.

Go to * மனமது செம்மையானால்*  YouTube Channel and praise Agathiyar 108
https://youtu.be/WRT8WG1KVRo
   H
       Watch the video in full with headphones 🎧 Theta sounds will help you feel the meditative state.
      
Thanks

Sunday, August 29, 2021

அகத்தியரை ஏன் வணங்க வேண்டும்?

அன்பர்களுக்கு வணக்கம்.

அகத்தியரை ஏன் வணங்க வேண்டும்?

அகத்தியரை, அகஸ்தியர் எனவும்  அகஸ்தீஸ்வரர் எனவும் அழைப்பர்.

அகஸ்தியரை முனிவராக பார்க்கலாம்; சித்தராக பார்க்கலாம்;ரிஷியாக பார்க்கலாம்; அதையும் தாண்டி ஈசனாகவும் பார்க்கலாம்.

எல்லையற்ற பிரபஞ்சத்தை ஆளுகின்ற ஈசனை விஸ்வநாதன் என்றழைப்பர்; விஸ்வேஸ்வரன் என்றும் அழைக்கலாம்.அதேபோல நுண்ணினும் நுண்ணியதாய்  நமக்குள் வீற்றிருந்து அகத்தை ஆளுகின்ற ஈசனை அகத்தீஸ்வரர் என்றும் அழைக்கலாம். ஈசன் வேறு  அகத்தியர் வேறு அல்ல.

மனதை ஆளுகின்ற ஈசனாக இருப்பதால், அவரை வணங்கினால், உங்கள் மனம் செம்மையாகும்;அவரைப் போற்றித் துதிக்க துதிக்க உங்கள் மனம் தெளிவாகும்; அவரை உள்ளம் உருகி வணங்க, வணங்க அவர் உங்கள் உள்ளத்தில் எழுந்தருளுவார்.

சரி, எப்படி அவரை வணங்குவது?

அவரவர் தகுதிக்கேற்ப,அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப,அவரவர் கல்வி கேள்விகளுக்கு ஏற்ப, அவரவர் பக்குவத்திற்கு ஏற்ப அவரை வணங்கலாம்.

தவம் இயற்றலாம்;அருள் தருவார். அஷ்டாங்க யோகத்தின் வழிநின்று அவரை அடைய முயலலாம்;உங்கள் அருகில் நின்று வழிநடத்துவார். என்னாலாவது ஒன்றுமில்லை ஆவதனைத்தும் அகத்தியன் செயலே என்றெண்ணினால் உங்களுளிருந்து அனைத்தையும் செய்து முடிப்பார்.

அவரை எப்படி வணங்குவது?

பக்தி நெறியில் நாமாவளி அல்லது போற்றி சொல்லுதல் ஒரு நல்ல வழிபாட்டு முறை. 108 முறை அவரை போற்றி துதிக்கும் பொழுது, நம் மனம் அவரையே பற்றிக் கொண்டிருக்கும் பொழுது, அவர் நம்முள் நுழைந்து நம் அகத்தை ஒளிமயமாய் மாற்றுவார்.

இந்த அகத்தியர் 108 போற்றி, அவரின் துணைவியார்,ரிஷி பத்தினி, அம்மை ஈஸ்வரியின் மறு உருவம் லோபாமுத்திரை அருளியது என நான் அறிகின்றேன்.எனவே இந்த அகத்தியரின் 108 போற்றி சொல்லி அவரை வழிபடுவது மிகுந்த பலனை கொடுக்கும்.

108 போற்றியை எப்படி சொல்வது ?

எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். உங்களுக்கு எப்படி சொல்ல பிடிக்கிறதோ அப்படி சொல்லலாம்.

எப்படி சொன்னால் நன்றாக இருக்கும் என்று நான் கருதினேனோ அந்த வகையில் இந்த காணொளியை உருவாக்கி இருக்கிறேன்.

அவர் என்னுள் சுவாசமாய் உள்ளே நுழைந்து, என் அகத்தை சீராக்கி, கசடுகளை வெளியேற்றி  மறுபடியும் நுழைந்து அகத்தை சீராக்கி கசடை தூக்கி எறிந்து.....

ஓம் என்ற உள் மூச்சில் உள் நுழைந்து,  நாமாவளியின் பொழுது அகத்தை தூய்மை செய்து, போற்றி எனும் வெளிமூச்சில் என் அக கசடை வெளியே அகற்றி...

இப்படி ஒவ்வொரு முறையும் என் அகத்தை சீரமைக்கின்ற முறையாய் இருப்பதால்,போற்றியை, ஆர்ப்பாட்டமில்லாமல் அவசரமில்லாமல் நிதானமாக, மிக நிதானமாக சொல்லியிருக்கிறேன்.

நீங்களும் ஓம் ஸ்ரீ சத்குரு அகத்தியர் 108 போற்றியை தினமும் சொல்லி, அவருடைய பூரண அருளை பெற்றிட அவரது பாத கமலங்களில் சரணடைகிறேன்.

நன்றி

குறிப்பு:
மேற்கண்டவற்றை  நன்கு உள்வாங்கிய பிறகு, மறுபடியும் * மனமது செம்மையானால்* YouTube Channel

(https://youtu.be/WRT8WG1KVRo)

சென்று 🎧 ஹெட்போனுடன் முழுமையாக கேட்டு பாருங்கள்;
உங்கள் மனம் செம்மைபாகும்.

வாழ்த்துக்கள்.

 Why worship Agathiyar?

 

 Agathiyar is also known as Agasthiyar and Agastheeswarar.

 

 Agastya can be seen as a sage; See as Siddhar; see as Rishi; Beyond that it can also be seen as Eswar.

 

 Eswar, who rules the infinite universe, is called Viswanathan; We can also call him Visvesvaraya. Agasthiyar is no different from Eswar.

 

 If you worship him because he is the ruling Eswar of the mind, your mind will be pure; your mind will be clear,if you praise and glorify Him; He will arise into your soul and melt your heart.

 

 Well, how to worship him?

 

 He can be worshiped according to your merits, according to your circumstances, according to your education, according to your maturity.

 

 Penance can be composed; grace will give. You can try to reach him through the path of Ashtanga Yoga; he will stand near you and guide you. Agathiyan will do everything for you if you thinks that every thing is done by Agasthiyar not by you

 

 How to worship him?

 

 Namavali or chanting Name in devotional practice is a good form of worship. When we praise Him 108 times, when our minds are clinging to Him, He will enter into us and transform our inmost being into a light.

 

 I know that the reincarnation of this Agathiyar 108 Potri was chanted by his consort, Rishi Pathini, Ammai Eswari bestowed the Lopamudra.

 

 How to tell the 108 Potri?

 

You can tell anyway. You can say whatever way you like to say.


 I made this video in a way that I thought would be nice to say.

 

 He breathed into me, adjusted my gut, expelled the dirt and re-entered the gut and threw the dirt .....

  Entering in the inner breath of Om, cleansing the inside during the nomenclature, and expelling my inner trash out in the outer breath called Potri ...

  

 Since every time like this is a way of aligning my intuition, I have chanted the Potri, calmly, very calmly, without haste , without hurrybury.  

 

 I also say Om Sri Satguru Agathiyar 108 Potri daily and surrender at his foot lotuses for you to receive His perfect grace.

 

 Thanks

 

 Note:

 

  After a good understanding of the above,go again to * மனமது செம்மையானால்* YouTube Channel

  

  (https://youtu.be/WRT8WG1KVRo)

  

 and listen fully with headphones 🎧;

 Your mind is refined.

 Congratulations.

Friday, August 27, 2021

மனமது செம்மையானால்


அன்பர்களுக்கு வணக்கம்.

மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டா;
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா;
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா; மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே.

அகத்தியர் என்ன சொல்ல வருகிறார்?

மந்திரம் ஜெபிக்க தேவையில்லை;வாயுவை உயர்த்த தேவையில்லை; வாசியை நிறுத்த தேவையில்லை என்று கூறுகிறாரா?

இல்லை. மனம் செம்மையானால் .....மேற்கண்ட வை  தேவையில்லை என்று கூறுகிறார். அது வரை?

மந்திரம் ஜெபிக்க வேண்டும்;
வாயுவை உயர்த்த வேண்டும்;வாசியை நிறுத்த வேண்டும்.

சரி.மந்திரம் ஏன் செபிக்க வேண்டும்.

மனம் செம்மையாவதற்கு.

எப்படி சாத்தியம்?

மனதை அறிந்தால்...

மந்திரம் செபிப்பது எப்படி துணை செய்யும்?

மனதை அமைதியாக்கும்.

சரி எப்படி மந்திரம் ஜெபிக்க வேண்டும்?

கவனமாக.

கவனமாகவா? புரியவில்லையே?

கவனம் மூச்சில் இருக்கவேண்டும்.

அப்பறம்.....

சொன்னால் புரிவதை விட கேட்டு பாருங்கள்.நன்கு புரியும்.

https://youtu.be/WRT8WG1KVRo

Hello dear ones.

Do not pray mantras if the mind is pure;
  Do not raise the air if the mind is pure;
   Do not stop the breathif the mind is pure;
    If the mind is pure, then the mantra is pure.
   
What is Agathiyar coming to say?

No need to pray mandra; no need to raise the air;  Says there is no need to stop breath?

No.  If the mind is pure ..... He says that the above is not necessary.  Until then?

The mantra is to pray;
  Raise the air; stop the breath.
 
OK.Why should the mantra be said.

To purify the mind.

How is that possible?

If you know the mind ...

How does chanting help?

Calming the mind.

Well how to chant mantra?

Be attentive.
Be attentive?  Don't understand?

The focus should be on the breath.

What next .....

You can got it if you listen it rather than I explain.

https://youtu.be/WRT8WG1KVRo

Tuesday, August 24, 2021

சித்தர்கள் போற்றி!

 

சித்தர்கள் போற்றி!

 

திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும்

திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்

திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும்

திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே.

 

 

ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி!

ஓம் அகப்பைச்சித்தர் திருவடிகள் போற்றி!

ஓம் அசுவினித்தேவர் திருவடிகள் போற்றி!

ஓம் அத்திரி மகரிஷி திருவடிகள் போற்றி!

ஓம் அநுமான் திருவடிகள் போற்றி!

 

ஓம் அம்பிகானந்தர் திருவடிகள் போற்றி!

ஓம் அருணகிரிநாதர் திருவடிகள் போற்றி!

ஓம் அருள்நந்தி சிவாச்சாரியார் திருவடிகள் போற்றி!

ஓம் அல்லமா பிரபு திருவடிகள் போற்றி!

ஓம் அழுகணிச் சித்தர் திருவடிகள் போற்றி!

 

 

ஓம் இடைக்காடர் திருவடிகள் போற்றி!

ஓம் இராமலிங்க சுவாமிகள் திருவடிகள் போற்றி!

ஓம் இராமதேவர் திருவடிகள் போற்றி!

ஓம் இராமானந்தர் திருவடிகள் போற்றி!

ஓம் உமாபதி சிவாச்சாரியார் திருவடிகள் போற்றி!

 

ஓம் ஔவையார் திருவடிகள் போற்றி!

ஓம் கஞ்சமலைச் சித்தர் திருவடிகள் போற்றி!

ஓம் கடைப்பிள்ளை சித்தர் திருவடிகள் போற்றி!

ஓம் கடுவெளிச்சித்தர் திருவடிகள் போற்றி!

ஓம் கண்ணானந்தர் திருவடிகள் போற்றி!

 

ஓம் கன்னிச்சித்தர் திருவடிகள் போற்றி!

ஓம் கணநாதர் திருவடிகள் போற்றி!

ஓம் கணபதிதாசர் திருவடிகள் போற்றி!

ஓம் கதம்ப மகரிஷி திருவடிகள் போற்றி!

ஓம் கபிலர் திருவடிகள் போற்றி!

 

ஓம் கமல முனிவர் திருவடிகள் போற்றி!

ஓம் கருவூர்தேவர் திருவடிகள் போற்றி!

ஓம் கல்லுளிச்சித்தர் திருவடிகள் போற்றி!

ஓம் கலைக்கோட்டு முனிவர் திருவடிகள் போற்றி!

ஓம் கவுபாலச்சித்தர் திருவடிகள் போற்றி!

 

ஓம் கணராமர் திருவடிகள் போற்றி!

ஓம் காகபுஜண்டர் திருவடிகள் போற்றி!

ஓம் காசிபர் திருவடிகள் போற்றி!

ஓம் காலாங்கிநாதர் திருவடிகள் போற்றி!

ஓம் குகை நமச்சிவாயர் திருவடிகள் போற்றி!

 

ஓம் குதம்பைச்சித்தர் திருவடிகள் போற்றி!

ஓம் குமரகுருபரர் திருவடிகள் போற்றி!

ஓம் குருதட்சிணாமூர்த்தி திருவடிகள் போற்றி!

ஓம் குருராஜர் திருவடிகள் போற்றி!

ஓம் குறும்பைச்சித்தர் திருவடிகள் போற்றி!

 

ஓம் கூர்மானந்தர் திருவடிகள் போற்றி!

ஓம் கொங்கணேஸ்வரர் திருவடிகள் போற்றி!

ஓம் கோரக்கர் திருவடிகள் போற்றி!

ஓம் கௌசிகர் திருவடிகள் போற்றி!

ஓம் கௌதமர் திருவடிகள் போற்றி!

 

ஓம் சங்கமுனிச்சித்தர் திருவடிகள் போற்றி!

ஓம் சங்கர மகரிஷி திருவடிகள் போற்றி!

ஓம் சங்கிலிச்சித்தர் திருவடிகள் போற்றி!

ஓம் சச்சிதானந்தர் திருவடிகள் போற்றி!

ஓம் சட்டநாதர் திருவடிகள் போற்றி!

 

ஓம் சண்டிகேசர் திருவடிகள் போற்றி!

ஓம் சத்தியானந்தர் திருவடிகள் போற்றி!

ஓம் சிவயோக மாமுனிவர் திருவடிகள் போற்றி!

ஓம் சிவவாக்கியர் திருவடிகள் போற்றி!

ஓம் சிவானந்தர் திருவடிகள் போற்றி!

 

ஓம் சுகப்பிரம்மர் திருவடிகள் போற்றி!

ஓம் சுந்தரானந்தர் திருவடிகள் போற்றி!

ஓம் சுந்தரமூர்த்தி திருவடிகள் போற்றி!

ஓம் சூதமுனிவர் திருவடிகள் போற்றி!

ஓம் சூரியானந்தர் திருவடிகள் போற்றி!

 

ஓம் சூலமுனிவர் திருவடிகள் போற்றி!

ஓம் சேது முனிவர் திருவடிகள் போற்றி!

ஓம் சொரூபானந்தர் திருவடிகள் போற்றி!

ஓம் ஜம்பு மகரிஷி திருவடிகள் போற்றி!

ஓம் ஜமதக்னி திருவடிகள் போற்றி!

 

ஓம் ஜனகர் திருவடிகள் போற்றி!

ஓம் ஜனந்தனர் திருவடிகள் போற்றி!

ஓம் ஜனாதனர் திருவடிகள் போற்றி!

ஓம் ஜனக்குமாரர் திருவடிகள் போற்றி!

ஓம் ஜெகநாதர் திருவடிகள் போற்றி!

 

ஓம் ஜெய முனிவர் திருவடிகள் போற்றி!

ஓம் ஞானச்சித்தர் திருவடிகள் போற்றி!

ஓம் டமரானந்தர் திருவடிகள் போற்றி!

ஓம் தன்வந்திரி திருவடிகள் போற்றி!

ஓம் தாயுமான சுவாமிகள் திருவடிகள் போற்றி!

 

ஓம் தானானந்தர் திருவடிகள் போற்றி!

ஓம் திரிகோணச்சித்தர் திருவடிகள் போற்றி!

ஓம் திருஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி!

ஓம் திருநாவுக்கரசர் திருவடிகள் போற்றி!

ஓம் திருமாளிகைத்தேவர் திருவடிகள் போற்றி!

 

ஓம் திருமூலதேவர் திருவடிகள் போற்றி!

ஓம் திருவள்ளுவர் திருவடிகள் போற்றி!

ஓம் தூர்வாச முனிவர் திருவடிகள் போற்றி!

ஓம் தேரையர் திருவடிகள் போற்றி!

ஓம் நந்தனார் திருவடிகள் போற்றி!

 

ஓம் நந்தீஸ்வரர் திருவடிகள் போற்றி!

ஓம் நாதாந்த சித்தர் திருவடிகள் போற்றி!

ஓம் நாரதர் திருவடிகள் போற்றி!

ஓம் நொண்டிச்சித்தர் திருவடிகள் போற்றி!

ஓம் பட்டினத்தார் திருவடிகள் போற்றி!

 

ஓம் பத்ரகிரியார் திருவடிகள் போற்றி!

ஓம் பதஞ்சலியார் திருவடிகள் போற்றி!

ஓம் பரத்துவாசர் திருவடிகள் போற்றி!

ஓம் பரமானந்தர் திருவடிகள் போற்றி!

ஓம் பராசரிஷி திருவடிகள் போற்றி!

 

ஓம் பாம்பாட்டிச்சித்தர் திருவடிகள் போற்றி!

ஓம் பிங்கள முனிவர் திருவடிகள் போற்றி!

ஓம் பிடிநாகீசர் திருவடிகள் போற்றி!

ஓம் பிருகு மகரிஷி திருவடிகள் போற்றி!

ஓம் பிரம்ம முனிவர் திருவடிகள் போற்றி!

 

ஓம் பீர்முகமது திருவடிகள் போற்றி!

ஓம் புண்ணாக்கீசர் திருவடிகள் போற்றி!

ஓம் புலத்தீசர் திருவடிகள் போற்றி!

ஓம் புலிப்பாணிச்சித்தர் திருவடிகள் போற்றி!

ஓம் பூனைக்கண்ணார் திருவடிகள் போற்றி!

 

ஓம் போக மகரிஷி திருவடிகள் போற்றி!

ஓம் மச்சமுனிவர் திருவடிகள் போற்றி!

ஓம் மஸ்தான் திருவடிகள் போற்றி!

ஓம் மயூரேசர் திருவடிகள் போற்றி!

ஓம் மாணிக்க வாசகர் திருவடிகள் போற்றி!

 

ஓம் மார்க்கண்டேயர் திருவடிகள் போற்றி!

ஓம் மாலாங்கன் திருவடிகள் போற்றி!

ஓம் மிருகண்ட ரிஷி திருவடிகள் போற்றி!

ஓம் முத்தானந்தர் திருவடிகள் போற்றி!

ஓம் மெய்கண்டதேவர் திருவடிகள் போற்றி!

ஓம் மௌனசித்தர் திருவடிகள் போற்றி!

ஓம் யாகோபு திருவடிகள் போற்றி!

ஓம் யூகிமுனிவர் திருவடிகள் போற்றி!

ஓம் யோகச் சித்தர் திருவடிகள் போற்றி!

ஓம் யோகானந்தர் திருவடிகள் போற்றி!

 

ஓம் ரோமரிஷி திருவடிகள் போற்றி!

ஓம் வசிஷ்ட மகரிஷி திருவடிகள் போற்றி!

ஓம் வரதரிஷி திருவடிகள் போற்றி!

ஓம் வரரிஷி திருவடிகள் போற்றி!

ஓம் வராகிமிகி திருவடிகள் போற்றி!

 

ஓம் வால்மீகி திருவடிகள் போற்றி!

ஓம் விசுவாமித்திரர் திருவடிகள் போற்றி!

ஓம் வியாக்ரமர் திருவடிகள் போற்றி!

ஓம் வியாசமுனிவர் திருவடிகள் போற்றி!

ஓம் விளையாட்டுச் சித்தர் திருவடிகள் போற்றி!

 

ஓம் வேதாந்த சித்தர் திருவடிகள் போற்றி!

ஓம் எண்ணிலா கோடி சித்த ரிஷி கணங்கள்     திருவடிகள் போற்றி!போற்றி!

 

வாழ்கவே வாழ்கஎன் நந்திதிருவடி

வாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம்

வாழ்கவே வாழ்க மெய்ஞானத் தவன்தாள்

வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே

 

திருச்சிற்றம்பலம்

ஸ்ரீ லோபமுத்திரை 108 போற்றி அர்ச்சனை

 

ஸ்ரீ லோபமுத்திரை 108 போற்றி அர்ச்சனை

 

ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி!

ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி!

ஓம் அருமறையின் வரம்பே போற்றி!

ஓம் அறம் வளர்க்கும் அம்மையே போற்றி!

ஓம் அருந்தவ செல்வியே போற்றி!

 

ஓம் அப்பர் பிணி மருந்தே போற்றி!

ஓம் அகஸ்தியன் தேவியே போற்றி!

ஓம் அருள் நிறை அம்மையே போற்றி!

ஓம் ஆதியின் பாதியே போற்றி!

ஓம் ஆனந்த நாயகியே போற்றி!

 

ஓம் இளவஞ்சிக் கொடியே போற்றி!

ஓம் உயிர் ஓவியமே போற்றி!

ஓம் உலக நாயகியே போற்றி!

ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி!

ஓம் ஏகனின் துணைவி போற்றி!

 

ஓம் ஐயந்தீர்ப்பாய் போற்றி!

ஓம் ஒப்பிலா அமுதே போற்றி!

ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி!

ஓம் கற்றோர்க்கினியோய் போற்றி!

ஓம் கல்லார்க்கும் எளியோய் போற்றி!

 

ஓம் கடம்பவன சுந்தரியே போற்றி!

ஓம் கல்யாண சுந்தரியே போற்றி!

ஓம் கனகமணி குன்றே போற்றி!

ஓம் கற்பின் அரசியே போற்றி!

ஓம் கனகாம்பிகையே போற்றி!

 

ஓம் கதிரொளிச்சுடரே போற்றி!

ஓம் கற்பனை கடந்தாய் போற்றி!

ஓம் காதார் குழலீ போற்றி!

ஓம் குடமுனி நாயகி போற்றி!

ஓம் குற்றம் பொறுப்பாய் போற்றி!

 

ஓம் கூடற் காலப மயிலே போற்றி!

ஓம் கோலப் பசுங்கிளியே போற்றி!

ஓம் சக்தியின் வடிவே போற்றி!

ஓம் சங்கம் வளர்த்தாய் போற்றி!

ஓம் சங்கிரிக்கொப்பாய் போற்றி!

 

ஓம் செங்கமல தாயே போற்றி!

ஓம் செண்டு கைகொண்டாய் போற்றி!

ஓம் செண்பக வல்லியே போற்றி!

ஓம் செந்தமிழ் தாயே போற்றி!

ஓம் செல்வ நாயகியே போற்றி!

 

ஓம் செல்வம் தருவாய் போற்றி!

ஓம் சுடரே போற்றி !

ஓம் ஜோதியே போற்றி!

ஓம் சிங்கார வல்லியே போற்றி!

ஓம் சிவகாம சுந்தரியே போற்றி!

 

ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி!

ஓம் சிவானந்த வல்லியே போற்றி!

ஓம் சூளா மணியே போற்றி!

ஓம் ஞானாம்பிகையே போற்றி!

ஓம் ஞானத்தின் வடிவே போற்றி!

 

ஓம் ஞானப் பூங்கோதையே போற்றி!

ஓம் தவமுனி நாயகியே போற்றி!

ஓம் திருவே போற்றி!

ஓம் திருவின் துணைவி போற்றி!

ஓம் திருவுடையம்மனே போற்றி!

 

ஓம் திருநிலை நாயகியே போற்றி!

ஓம் தீந்தமிழ் தந்தாய் போற்றி!

ஓம் தீவினை அறுப்பாய் போற்றி!

ஓம் துயரம் துடைப்பாய் போற்றி!

ஓம் குரு பத்தினியே போற்றி!

 

ஓம் தெவிட்டாத அமுதே போற்றி!

ஓம் தென்னவன் தேவியே போற்றி!

ஓம் தேன்மொழியம்மையே போற்றி!

ஓம் தோன்றா துணைவி போற்றி!

ஓம் தையல் நாயகியே போற்றி!

 

ஓம் இல்லற துறவி போற்றி!

ஓம் இன்பம் அளிப்பாய் போற்றி!

ஓம் நல்லருங் கொழுந்தே போற்றி!

ஓம் நல்லவர்க்கினியோய் போற்றி!

ஓம் நாடுவார்க்கருள்வாய் போற்றி!

 

ஓம் நீலாம்பிகையே போற்றி!

ஓம் நோயினை தவிர்ப்பாய் போற்றி!

ஓம் பசுபதி நாயகியே போற்றி!

ஓம் பல்லுயிரின் தாயே போற்றி!

ஓம் பவளவாய்க் கிளியே போற்றி!

 

ஓம் பக்தனை காப்பாய் போற்றி!

ஓம் பழமறையின் குருந்தே போற்றி!

ஓம் பரமானந்த வல்லியே போற்றி!

ஓம் பவழக் கொடியே போற்றி!

ஓம் பண்ணின் மணியே போற்றி!

 

ஓம் பாகம் பிரியாள் போற்றி!

ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி!

ஓம் பொதிகையில் அமர்ந்தாய் போற்றி!

ஓம் பொருநையின் தாயே போற்றி!

ஓம் பொற்கொடியே போற்றி!

 

ஓம் பெரிய நாயகியே போற்றி!

ஓம் பேரின்பப் பெருக்கே போற்றி!

ஓம் பேரருட்கடலே போற்றி!

ஓம் மக்களை காப்பாய் போற்றி!

ஓம் மங்கள நாயகியே போற்றி!

 

ஓம் மழலைக் கிளியே போற்றி!

ஓம் மனோன்மணியே போற்றி!

ஓம் மாணிக்க வல்லியே போற்றி!

ஓம் முக்கட் சுடரே போற்றி!

ஓம் முக்தியைத் தருவாய் போற்றி!

 

ஓம் முழுமுதற் பொருளே போற்றி!

ஓம் முனிவரின் துணைவி போற்றி!

ஓம் முத்தமிழ் செல்வி போற்றி!

ஓம் முன்வினை தீர்ப்பாய் போற்றி!

ஓம் வேதவல்லியே போற்றி!

 

ஓம் வேதவிழுப் பொருளே போற்றி!

ஓம் வித்தகச் செல்வி போற்றி!

ஓம் விமல நாயகியே போற்றி!

ஓம் வையகம் காப்பாய் போற்றி!

ஓம் வாழ்வினை அளிப்பாய் போற்றி!

 

ஓம் விண்ணோர் மகிழும் விமலி போற்றி!

ஓம் வேண்முழுதும் தருவாய் போற்றி!

ஓம் லோபமுத்திரை அம்மையே போற்றி! போற்றி!

 

திருச்சிற்றம்பலம்