ஓம் ஸ்ரீ சத்குரு அகத்தியரே போற்றி
பிறவியறுக்க பிறவி எடுத்தேன்
பிறவியறுக்க அறியாமல் தவித்தேன்
பித்து பிடித்ததுபோல் படித்தேன்
வித்தை அறிந்திட துடிதுடித்தேன்
எழுபிறப்பின் பிடியினால் தவித்தேன்
விழுமிய வாழ்வு தேடி நொடிந்தேன்
சித்தர் வழி அறிந்து மகிழ்ந்தேன்
பித்தம் களைவதறிந்து நெகிழ்ந்தேன்
சித்தம் முழுதும் சிவனென தொழுதேன்
சித்தர்பலர் ஆசி வேண்டி அழுதேன்
சிவனும் கடைக்கண்ணால் அருளிணான்
சித்தர்களும் பரிவெனக்கு காட்டினர்
சிவனின் அன்பாலும் சித்தர்பலர்
தவத்தின் பயனாலும் ஆட்கொள்ளப்பட்டேன்
அகத்தியர் எம்அகம் புகுந்தார்
அகத்தை தெளிவித்து அருளினார்
அடுத்தது அடுத்ததென அறிவித்தார்
எடுத்தது எதிலும் தெளிவைதந்தார்
பிறவிப்பயனை உணரவைத்த உத்தமர்க்கு
பிறவியெடுத்து தொண்டுசெய்வேன்
ஓம் ஸ்ரீ சத்குரு அகத்தியரே போற்றி
YouTube Link:
அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.
*மனமது செம்மையானால்* YouTube சேனலில் இன்று வெளியாகி இருக்கின்ற "பிறவி அறுத்திடவே "காணொளியை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி*மனமது செம்மையானால்*YouTube Channel சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.Bell. Buttonn அமுக்கி alll ஐ தேர்ந்தெடுக்கவும். உடனடியாக உங்களுக்கு நோட்டிபிகேஷன் வரும்.
https://youtu.be/BrpCRvOkNmg
No comments:
Post a Comment